எந்த வகையான தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயார்-விமானப்படை தளபதி
எந்த வகையான தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயார் என்று இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதோரியா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாகவே பிரச்சினை இருந்து வருகிறது. அந்த வகையில் தான் கடந்த திங்கட்கிழமை இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விவகாரம் தற்போது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதோரியா ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்த வகையான தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் .லடாக் மோதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நாட்டிற்கு உறுதியளிக்கிறேன் என்று பேசினார்.