“நாங்கள் எச்சரிக்கை உடன் உள்ளோம் கவலை தேவையில்லை” -தளபதி தனோவா!

Default Image

ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.இதனால் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையிட்டது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது.மேலும் பாகிஸ்தான் லடாக் பகுதியில் தங்களது விமானதளத்தில்  போர் விமானங்களை குவித்து வைத்து உள்ளது.

Image result for indian air force

இந்நிலையில் இந்திய விமானப்படை விழிப்புடன் இருப்பதாக தளபதி பிஎஸ் தனோவா கூறியுள்ளார்.அவர் கூறுகையில் , பாகிஸ்தான் விமானப்படையின் செயல்பாடுகளை கவனித்து வருவதாகவும் , விமானப்படை விமானிகள் மட்டும் அல்லாமல் சாதாரணமான விமானங்களையும் கவனித்து வருகிறோம் என கூறினார்.

மேலும் நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடனும் ,விழிப்புடனும் உள்ளோம்.ஆகவே கவலைப்படதேவையில்லை என தளபதி பிஎஸ் தனோவா கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்