உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு தான் கூறவேண்டும்: விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா!!
- எதிர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை விமானப்படை கணக்கிடுவதில்லை, பலியான தீவிரவாதிகள் எண்ணிக்கை குறித்து மத்தியஅரசு தான் விளக்கமளிக்க வேண்டும் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா பேட்டி அளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் காரணமாக இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் எய்தினர்.
அதனைத் தொடர்ந்து இந்திய விமானப்படை, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சித் தளங்களை குறியீட்டு தாக்குதல் நடத்தியது. மேலும் அங்கு 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் இது குறித்து விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா பேட்டி அளித்துள்ளார்…
எங்களது இலக்கு தீவிரவாத முகாம்களை அழிப்பது மட்டுமே. முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது மட்டுமே நாங்கள். அங்கு எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து நாங்கள் கணக்கெடுக்க மாட்டோம் .அது எங்களது பணி அல்ல. இது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் பி.எஸ்.தனோவா.