காங்கிரஸ்: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்தும், காங்கிரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டனர்.
அப்போது, இந்தியா கூட்டணியில் முன்னர் அங்கம் வகித்த கட்சிகளோடு (ஐக்கிய ஜனதா தளம் – நிதிஷ் குமார்) கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க முயல்வீர்களா.? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், இதுபற்றி இப்போது கூற இயலாது. நாங்கள் எங்கள் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கட்சி தலைவர்களுடன் நாளை ஓர் சந்திப்பை நிகழ்த்த உள்ளோம். அந்த சந்திப்பில், ஆட்சி அமைப்பது தொடர்பான இந்த கேள்விகள் அங்கு எழுப்பப்படும். அதன் பிறகு பதில் அளிக்கிறோம் என செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்தார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…