இதற்கு நாங்களும் ரெடி! ஆனால் நேரடி ஒளிபரப்பு இருக்க வேண்டும் – மல்யுத்த வீராங்கனைகள்

wrestlers challenge

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் சம்மேளனம் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் சவாலை ஏற்றுக்கொண்ட மல்யுத்த வீராங்கனைகள். 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் சம்மேளனம் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது, ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதகங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல் நிலையத்தில் மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மல்யுத்த வீராங்கனைகள் கடந்த 23-ம் தேதி மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். டெல்லி ஜந்தர் மந்திர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் பிரிஜ் பூஷன் சரண் மீது 2 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சரண், தனக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உண்மையை கண்டறியும் நார்கோ பகுப்பாய்வு அல்லது பாலிகிராஃப் சோதனைக்கு உட்படுத்தத் நான் தயாராக இருப்பதாக நேற்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக பிரிஜ் பூஷண் ஃபேஸ்புக் பதிவில், நார்கோ சோதனை, பாலிகிராபி சோதனை அல்லது பொய் கண்டறிதல் ஆகிய சோதனையை பெற நான் தயாராக இருக்கிறேன். அதே சோதனை,  வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோரும் இந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது எனது நிபந்தனை. இரு மல்யுத்த வீரர்களும் தங்கள் சோதனைக்கு தயாராக இருந்தால், பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிக்கவும், நானும் இதற்கு தயாராக இருக்கிறேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றுள்ளார்.

இதற்கு பதிலளித்து மல்யுத்த வீராங்கனைகள் தரப்பில் கூறியிருப்பதாவது, நார்கோ சோதனை, பாலிகிராபி சோதனை அல்லது உண்மையை (பொய்) கண்டறியும் சோதனைகளுக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம். புகார் கொடுத்த அனைவரும் இந்த சோதனைக்கு (நார்கோ டெஸ்ட்) தயாராக உள்ளனர். நாட்டிற்காக விருது வாங்கி சாதனை படைத்தவர்க்கு பிரிஜ் பூஷன் அளித்த கொடுமையை, முழு நாடே அறியும் வகையில், இதனை நேரலை (live) செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்