உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம் என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.இதில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம் தெரிவித்தது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த நிலையில் தற்போது ஏற்றுக்கொள்வதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டது.
பின் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில் இது தொடர்பாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்.சபரிமலையில் எந்தவித பாகுபாடும் இருக்ககூடாது என்பது தான் எங்கள் கருத்தும். சீராய்வு மனுக்களின் விசாரணையில் பல்வேறு தரப்புகளின் கருத்துக்களை நீதிமன்றம் கேட்டுள்ளது. தீர்ப்பு புதிதாக விதிக்கப்பட்டால் அதையும் நாங்கள் ஏற்று செயல்படுவோம் என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…