பிரதமர் மோடி கூறியதை ஏற்கிறோம்,ஆனால் தயவு செய்து ஆலோசனை கேளுங்கள்- ப.சிதம்பரம் கருத்து
பிரதமர் மோடி கூறியதை ஏற்கிறோம்,ஆனால் தயவு செய்து வல்லுநர்களிடம் ஆலோசனை கேளுங்கள் என்று சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் , இன்று லாக்டவுனின் 10-வது நாள் பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம்.மேலும் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என பிரதமர் மோடி கூறினார்.
இதையெடுத்து வருகின்ற ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.
வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,ஏப்ரல் 5ம் தேதி விளக்கேற்றுவதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.”ஒவ்வொரு உழைக்கும் ஆண்களும், பெண்களும் மற்றும் தொழிலதிபர்கள் முதல் தினக்கூலிகள் வரை அனைவரும் பொருளாதார சரிவை மீட்டெடுப்பதற்கான வழிகள் பற்றி நீங்கள் அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்தார்கள்.ஆனால் அதற்கு மாறாக நடந்துள்ளது.எனவே பிரதமர் பொருளாதார வல்லுநர்கள், தொற்று நோயியல் நிபுணர்களின் ஆலோசனையையும் கேட்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
What we expected from you today was FAP II, a generous livelihood support package for the poor, including for those categories of poor who were totally ignored by @nsitharaman on 25-3-2020.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 3, 2020