WBCS exam:சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்த கேள்வி – கொந்தளித்த பாஜக..!

Default Image

மேற்கு வங்க குடிமைப் பணியாளார் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்த கேள்வியால் பாஜகவினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கும் மம்தா பானர்ஜியின் மேற்குவங்க அரசுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.

இந்நிலையில்,கடந்த ஆகஸ்ட் 22  ஆம் தேதியன்று மேற்கு வங்க குடிமைப் பணியாளார் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ஆங்கிலேயே அரசிடம் மன்னிப்பு கடிதம் அளித்த புரட்சிகர தலைவர் யார் ? என்ற கேள்வியும்,விடி சாவர்க்கர், பிஜி திலக், சுக்தேவ் தாப்பர் மற்றும் சந்திர சேகர் ஆசாத் ஆகிய நான்கு விருப்பங்களும் இடம் பெற்றது.அதனை தொடர்ந்து சாவர்க்கர் என்ற பதிலும் இடம் பெற்றிருப்பது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக,மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியதாவது,”மேற்குவங்க சிவில் சர்வீஸ் (WBCS) தேர்வுத் தாள் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் செல்லப்பிராணித் திட்டத்தை விளம்பரப்படுத்தியது”, என்று குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய பொது சேவை ஆணையம் (UPSC) CAPF (மத்திய ஆயுதப்படை காவல்துறை) தேர்வுக்காக “BJP அளித்த கேள்விகளை” கேட்டதாக குற்றம் சாட்டினார்.

கடந்த வாரம் மாநிலச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “யுபிஎஸ்சி பாஜகவின் கேள்விகளைக் கேட்கிறது.முன்னதாக,யுபிஎஸ்சி ஒரு பக்கச்சார்பற்ற அமைப்பாக இருந்தது, ஆனால் தற்போது பாஜக அதற்கு கேள்விகளைக் கொடுக்கிறது. விவசாயிகளின் போராட்டம் குறித்த யுபிஎஸ்சி தாளில் உள்ள கேள்வி கூட அரசியல் உள்நோக்கம் கொண்டது”,என்று தெரிவித்தார்.

சாவர்க்கர்:

இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்,இந்திய அரசியல் பிரமுகர், ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். அவர் 1922 இல் ரத்னகிரியில் சிறையில் இருந்தபோது இந்துத்துவாவின் இந்து தேசியவாத அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்