கேரளா : வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ன்னும் 240 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
சூரல்மாலா மற்றும் மேப்பாடியில் நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த 578 குடும்பங்களைச் சேர்ந்த 2,328 பேர் ஒன்பது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 4ஆவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க ராணுவம், இஸ்ரோ, வனத்துறை, காவல்துறை என பலரும் கைக்கோர்த்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்பு பணிகளுக்கு உதவ கூடுதல் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. முண்டக்கையில் 15 மண் அள்ளும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் மற்றும் மோப்ப நாய் குழுவுடன் தேடுதல் பணியை காலை 6 மணிக்குத் தொடங்குகியது.
தெர்மல் ஸ்கேனர்
நிலச்சரிவால் மண்ணில் புதைந்தவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தெர்மல் ஸ்கேனரானது சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் காட்டிக் கொடுக்கும்.
பெய்லி பாலம்
சுரல் மலையில்சாலியாற்றின் குறுக்கே பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதிக்கு வாகனங்கள் கொண்டு செல்ல ஏதுவாக ராணுவத்தின் மெட்ராஸ் பொறியியல் படைப்பிரிவு சுமார் 36மணி நேரத்தில் 190 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட பெய்லி பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. இதில் ராணுவ வாகனம் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. சூரல்மலை முண்டக்கை இடையிலான இருவிழிஞ்சி ஆற்றை கடக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ராணுவத்துடன் இணைந்த இஸ்ரோ
வயநாட்டில் ராணுவத்துடன் இணைந்து மீட்பு பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருவதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். நிலச்சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிமீ பயணித்து முடிந்துள்ளதாகவும், சுமார் 86 ஆயிரம் சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மண்ணில் புதைந்து இறந்தவர்களை கண்டறிய நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
27 மாணவர்கள் பலி
முண்டக்கை, வெள்ளரிமலையைச் சேர்ந்த 27 பள்ளி மாணவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு. பள்ளிக் கல்வித் துறை நடத்திய ஆய்வில், மேலும் 23 மாணவர்களைக் காணவில்லை என அதிர்ச்சித் தகவல்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…