வயநாடு நிலச்சரிவு : புதைந்த வீட்டிலிருந்து உயிரோடு வந்த 4 பேர்..! நிகழ்ந்தது எப்படி?

kerala wayanad landslide

வயநாடு நிலச்சரிவு : தொடர் கனமழை காரணமாக கேரளாவில் பெய்த கனமழையால் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சிலர் இந்த நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் 5-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாட்டின் சூரல் மலை பகுதியில் இருந்து 4 மீட்டர் தொலைவில் இருந்த படவேட்டிக்குன்னுவில் பகுதியில் 4-வது நாளாக  இந்திய ராணுவபடை மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த சமயத்தில் மண்ணிற்குள் புதைத்து இருந்த வீடு ஒன்றை பார்த்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து 2 ஆண்கள், 2 பெண்கள் உயிரோடு  மீட்கப்பட்டுள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில், அடுத்ததாக என்ன செய்யப்போகிறோம் என்ற பயத்துடன் வீட்டிற்குள் அந்த 4 பேரும் இருந்த நிலையில், இந்திய ராணுவபடை  அவர்களை உயிருடன் மீட்டு விமானம் மூலம்  மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர்கள் நலமாக இருக்கிறார்கள். மீட்கப்பட்ட அந்த 4 பேரில் ஒருவருடைய பெயர் ஜானி என்பது தெரிய வந்து இருக்கிறது. அவர் சொந்தமாக தோட்டம் வைத்து அதனை பராமரிப்பு செய்து வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும், உயிருடன் மீட்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு காலில் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், நிலச்சரிவு ஏற்பட்ட போது வீட்டிற்குள் இருந்த அந்த 4 பேரும் உயரமான இடத்திற்கு சென்ற காரணத்தால் தான் உயிர் பிழைத்தார்கள் எனவும் இந்திய ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

நிலச்சரிவை தொடர்ந்து அதிக பாதிப்புகளை சந்தித்த சூரல்மலையில் உள்ள பெய்லி இடங்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அங்கிருக்கும் பாலத்தில் அங்குள்ள மக்கள் அங்கும் இங்கும் நடந்து சென்று வருகிறார்கள். இன்னும் ஒரு சில தினங்களில் வயநாடு முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்