ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் டெல்லியில் முகாம் மிட்டார்.
அதன் பின்னர் 2 முறை நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கலந்துகொள்ளவில்லை. இதனால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அவருடன் ஆதரவாளர்கள் 2 பேரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பைலட் செயல்படுகிறார் எனவும் , பாஜக உடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால்,சச்சின் இதற்கு மறுப்பு தெரிவித்தார். சமீபத்தில் திடீரென சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு சமரசம் ஏற்பட்டது.
இந்த சமரசம் முடிந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீண்டும் பேர் ஜெய்ப்பூர் வந்தனர். இந்நிலையில், நேற்று அசோக் கெலாட் இல்லத்தில் அவரது தலைமையில் நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டது.
அழைப்பை ஏற்ற சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கெலாட்டின் வீட்டிற்கு வந்தனர். அப்போது, அசோக் கெலாட் , சச்சின் பைலட் இருவரும் கைகுலுக்கி கொண்டனர். இந்நிலையில், இன்று ராஜஸ்தான் சட்டசபை நடைபெற்றது. இந்த, நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.
இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதிலிருந்து தப்பியது. சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தான் முழுவதும் சந்தோஷ அலை பரவியுள்ளது. பாஜகவின் சதி திட்டம் தோல்வியடைந்தது. இந்த வெற்றி ராஜஸ்தான் மக்களின் வெற்றி என நினைக்கிறேன்.
மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, மணிப்பூர் பின்பற்றிய அதே சதி திட்டத்தை ராஜஸ்தானிலும் செயல்படுத்த பாஜக முயன்றனர். ஆனால் அவர்களின் திட்டம் தோல்வியடைந்தது என கூறினார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…