தண்ணீர் பிரச்சனை 2-3 ஆண்டுகளில் தீர்க்கப்படும்..! அரவிந்த் கெஜ்ரிவால்..
டெல்லியின் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க தனது அரசு செயல்பட்டு வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் நீர் உற்பத்தி 2015ம் ஆண்டு ஒரு நாளைக்கு 850 மில்லியன் கேலன்களாக இருந்தது, 2023ம் ஆண்டு 1,000 மில்லியன் கேலன்களாக அதிகரித்துள்ளது. நீர் உற்பத்தித் திறனை 1,200 முதல் 1,300 மில்லியன் கேலன்களாக அதிகரித்தால் டெல்லி மக்கள் தண்ணீர் பிரச்சனையை சந்திக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நீரைக் கொண்டு ஏரிகளை புனரமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.