பெங்களூருவில் இன்றும் நாளையும் தண்ணீர் விநியோகம் தடை – எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…?
பெங்களூருவில் இன்றும் நாளையும் பழுது பார்க்கும் பணி காரணமாக தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் டிரான்ஸ்மிஷன் மெயின் பம்பிங் ஸ்டேஷனில் கசிவுகளைத் தடுப்பதற்கான பழுது பார்க்கும் பணிகள் நடைபெற இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரு நாட்கள் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கீழ் உள்ள காவிரி மூன்றாம் கட்டப் பகுதியான டி.கே. ஹள்ளி பகுதியில் தான் அதிகளவில் தண்ணீர் வழங்குவதில் இடையூறு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.