நீர்வளத் துறை அமைச்சர் தனாஜி வீட்டில் நண்டுகளை விட்டு போராட்டம் !

Default Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.ரத்னகிரி மாவட்டத்தின் சிப் லூன் தாலுகாவில் உள்ள திவாரே ஆணை நீர் நிரம்பி கடந்த 2-ம் தேதி அணையில் ஒரு பகுதி உடைந்தது.அணையை ஒட்டி இருந்த பல கிராமங்களில் தண்ணீர் புகுந்தது.

Related image

தண்ணீர் கிராமங்களில் புகுந்ததில் 12 வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.28 பேர் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.அதில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.இந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில நீர்வளத் துறை அமைச்சர் தனாஜி கூறுகையில் ஆணை உடைவதற்கு காரணம் நண்டுகள் தான் என கூறினார்.

Image result for Minister Tanaji

இந்த ஆணை 2004-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது.இங்கு அதிக அளவில் நண்டுகள் இருப்பதால் நண்டுகள் அணையை உடைப்பை ஏற்படுத்தியது என கூறினார்.இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் தனாஜி  வீட்டில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் பெட்டி நிறைய நண்டுகளை எடுத்து வீட்டில் போய் விட்டனர்.மேலும் பெண் தொண்டர்களும் முகத்தில் நண்டு முகமூடியை அணிந்தும் அமைச்சர் தனாஜி வீட்டின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்