நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் – கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி முழுமையான தண்ணீர் திறக்க முடியும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக எம்பிக்கள் விவாதம் நடத்த ஏதுவாக அறிக்கை வழங்கப்படும் .இந்த விவகாரத்தில் கர்நாடக எம்பிக்கள் அரசுக்கு துணை நிற்க வேண்டும்.
கர்நாடக காவிரி படுகையில் உள்ள 4 அணைகளில் மொத்தம் 13 டிஎம்சி தண்ணீர் தான் உள்ளது.காவிரி படுகையில் நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி முழுமையான தண்ணீர் திறக்க முடியும். இல்லையெனில் விகிதாச்சார அடிப்படையில் தான் தண்ணீர் திறக்கப்படும்.தற்போதைய நீர் இருப்பு நிலை குறித்து ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.