கடல்நீரைக் குடிநீராக்குவதன் மூலம் குடிநீர் ஒருலிட்டர் 5காசுகள்!
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடல்நீரைக் குடிநீராக்குவதன் மூலம் ஒருலிட்டர் 5காசுகள் என்கிற விலையில் குடிநீரைப் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் பேசிய அவர், ஆற்றுநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் சில மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தூத்துக்குடியில் சோதனை முறையில் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் ஒரு லிட்டர் 5காசுகள் என்கிற விலையில் குடிநீரைப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆற்று நீருக்காகப் பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு இடையில் தகராறு உள்ள நிலையில், அங்கிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் ஆறுகளில் ஏராளமான தண்ணீர் செல்வது பற்றி யாரும் கவலைப்படவில்லை என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.