நிரந்தரமாய் கையை கழுவுங்கள்..மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம்- குஷ்பு ட்வீட்..!
பீகாரில் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று நடக்கும் வாக்கு என்ணிக்கையில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் தற்போது பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில்பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அடிக்கடி கை கழுவுங்கள் இது corona சொல்லிய பாடம் நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம் வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும் என பதிவிட்டுள்ளார்.
அடிக்கடி கை கழுவுங்கள் இது corona சொல்லிய பாடம்
நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம்
வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்!! @BJP4India @BJP4TamilNadu @narendramodi @Murugan_TNBJP— KhushbuSundar ❤️ (@khushsundar) November 10, 2020