டெட்டால் மூலம் முகத்தைக் கழுவுங்கள்; காங்கிரஸை சாடிய நிர்மலா சீதாராமன்.!
காங்கிரசின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், டெட்டால் போட்டு முகத்தை கழுவுங்கள் என்று கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதையடுத்து, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் டெட்டால் மூலம் முகத்தை கழுவ வேண்டும் என்று கூறினார். நடந்துகொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு பட்ஜெட்டை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் வாசித்தார்.
இதனையடுத்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜஸ்தானில் ஏதோ தவறு இருக்கிறது, கடந்த ஆண்டு பட்ஜெட் இந்த ஆண்டு வாசிக்கப்படுகிறது, தவறுகள் யாருக்கும் ஏற்படலாம், ஆனால் யாருக்கும் அந்த நிலை வரக்கூடாது என நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகளின் நிதிக் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய சீதாராமன், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) ரூ.3 உயர்த்தும் இமாச்சலப் பிரதேச அரசின் முடிவை விமர்சித்தார். காங்கிரஸின் கலாச்சாரத்தில் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். ஆனால் நாங்கள் அவர்களுக்கு பதிலளிக்கும் போது, அவர்கள் வெளிநடப்பு செய்து கூச்சலிடுவார்கள்… ஊழல் விஷயத்தில், நீங்கள் டெட்டால் மூலம் உங்கள் முகத்தை கழுவ வேண்டும் என்று சீதாராமன், காங்கிரசை கடுமையாக சாடியுள்ளார்.
2023-24 யூனியன் பட்ஜெட்டைப் பாராட்டிய சீதாராமன், எளிமையான வார்த்தைகளில் இந்த பட்ஜெட், இந்தியாவின் வளர்ச்சிக்கான தேவைகளை சமநிலைப்படுத்துகிறது, மேலும் வேலைவாய்ப்பு உருவாக்கம், சிறு குறு தொழிலாளர்கள், விவசாயத் துறை, கிராமப்புற மக்கள், சுகாதாரம் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியவற்றில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது என்று நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.