மாணவர்களுக்கு எச்சரிக்கை! நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள்.. UGC அறிவிப்பு!

UGC

நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 20 பல்கலைக்கழகங்களை “போலி” என்றும், UGC சட்ட விதிகளின் கீழ் வராதவை எனவும் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இங்கு அளிக்கும் சான்றிதழ்கள் தகுதியற்றவை என்றும் இதனால் மாணவர்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த 20 பல்கலைக்கழகங்களும் மாணவர்களுக்கு பட்டம் வழங்க அதிகாரம் இல்லை. அங்கீகாரம் பெறாத அல்லது மோசடியான பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளைப் படிப்பதற்காக ஏமாற்றப்படுவதிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் யுஜிசி கூறியுள்ளது. பதிவு செய்வதற்கு முன், மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பல்கலைக்கழகங்களின் அங்கீகார நிலையை உறுதிப்படுத்துவது முக்கியம்.

யுஜிசி செயலர் மணீஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், யுஜிசி சட்ட விதிகளை மீறி பல கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவது கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள், உயர்கல்வி அல்லது வேலை நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படவோ செல்லுபடியாகவோ இருக்காது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை.

டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன, இது மிகவும் போலி கல்வி நிறுவனங்களைக் கொண்ட மாநிலமாக மாறியுள்ளது. மேலும், உத்தரபிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய இடங்களில் 20 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகிறது, இது போன்ற ‘போலி’ பல்கலைக்கழகங்களுக்கு எந்த பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை என்றுள்ளார்.

எனவே, மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் முன்பு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் குறித்த விவரங்களையும், போலி பல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களையும் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், யுஜிசி விதிகளுக்கு மாறாக பட்டப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு புகார் தெரிவிக்கலாம்.

20 போலி பல்கலைகழகங்கள் இதோ:

ஆந்திரப் பிரதேசம்:

  1. கிறிஸ்ட் டீம்ட் பல்கலைக்கழகம்.
  2. இந்திய பைபிள் திறந்த பல்கலைக்கழகம்.

டெல்லி:

  1. அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம் (AIIPHS) மாநில அரசு பல்கலைக்கழகம்.
  2. கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், தர்யாகஞ்ச், டெல்லி.
  3. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்.
  4. தொழிற்கல்வி பல்கலைக்கழகம்.
  5. ADR-சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம்.
  6. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம்.
  7. சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம்.
  8. அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்)

கர்நாடகா:

  1. படகன்வி சர்க்கார் உலக திறந்த பல்கலைக்கழகம்

கேரளா:

  1. செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம்.

மகாராஷ்டிரா:

  1. ராஜா அரபு பல்கலைக்கழகம்.

புதுச்சேரி:

  1. ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹயர் எஜுகேஷன்.

உத்தரப்பிரதேசம்:

  1. காந்தி ஹிந்தி வித்யாபித்.
  2. எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம்.
  3. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம்.
  4. பாரதிய சிக்ஷா பரிஷத்.

மேற்கு வங்காளம்:

  1. இந்திய மாற்று மருத்துவ நிறுவனம்.
  2. மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்