எச்சரிக்கை.! நாளை மாலை கரையை கடக்கிறது அம்பன் புயல்.!
மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நாளை மாலை அம்பன் புயல் கரையை கடக்கிறது – வானிலை மையம்
வங்க கடலில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது மேலும் வலுப்பெற்று, அதிதீவிர புயலாக மாறி, மேற்கு வங்க கடற்கரையில் இருந்து 630 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த புயல் 6 மணிநேரத்தில் 16 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்கிறது. மேலும், இது அதே திசையில் நகர்ந்து, நாளை மாலை வங்கதேசம்-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த புயல், மேற்கு மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடலில் சராசரியாக 150-160 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் அம்பன் புயல் கரையை கடக்க உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்த புயலால் ஒடிசா, மேற்கு வங்கத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைபெய்ய கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.