அடுத்த 3 நாட்களுக்கு இந்த 6 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.!
அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான வெப்பநிலை பதிவாகும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது – தேசிய வானிலை மையம்.
டெல்லி, பஞ்சாப் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஏற்கெனவே வெயில் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. சாலையில் கனல் நீர் பரவி, உஷ்ண காற்று வீசுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது வரும் 28-ம் தேதி வரை 47 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு கடுமையான வெயில் பதிவாகும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.