எச்சரிக்கை : 70 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் திருட்டு – இணைய பாதுகாப்பு ஆய்வாளர்
70 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்ஷேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார்.
70 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்ஷேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், இந்திய டெபிட் மட்டும் கிரெடிட் கார்ட் விவரங்கள் என தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2010 மற்றும் 2019 இடையிலான காலப்பகுதி தொடர்பான தரவுகள் கசிந்துள்ளதாகவும், இது மோசடி செய்பவர்களுக்கு ஹேக்கர்களுக்கும் மிகவும் மதிப்புமிக்க தகவல்கள் ஆகும். கசிந்துள்ள தரவுகள் நிதிதரவு என்பதால், ஹேக்கர்களுக்கு மதிப்பு மிக்க தகவல்கள் ஆகும். ஏனெனில் அவர்கள் தனிப்பட்ட தொடர்பு விவரங்களை ஃபிஷிங் அல்லது பிற தாக்குதல்களுக்கு பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.