எச்சரிக்கை..!’டோமினோஸ் பீட்சா’ ஆர்டர் செய்த 10 லட்சம் பேரின் கிரெடிட் கார்ட் தகவல்கள் ஹேக்கிங்…!
ஆன்லைனில் டோமினோஸ் பீட்சா ஆர்டர் செய்த 10 லட்சம் பேரின் கிரெடிட் கார்ட் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு டார்க் வெப்பில் ரூ.4 கோடிக்கு விற்பனைக்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பீட்சா நிறுவனமான ‘டோமினோஸ் பீட்சா’ இந்தியாவில் இணைய தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது.அதாவது,இந்தியாவில் ஆன்லைனில் டோமினோஸ் பீட்சா வாங்கிய கிட்டத்தட்ட 10 லட்சம் பேரின் கிரெடிட் கார்டு தகவல்கள் ரூ.4 கோடிக்கு மேல் டார்க் வெப்பில் விற்க தயார் நிலையில் உள்ளது,என்று இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ஹட்சன் ராக் நிறுவனத்தின் சி.டி.ஓ அலோன் கால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,”இந்தியாவில் உள்ள டோமினோஸ் பீட்சா நிறுவனத்தின் 13 TB அளவிலான தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்,இதில் ஐடி,பைனான்ஸ்,விளம்பரத் தகவல் மற்றும் டோமினோஸில் பணிபுரியும் 250க்கும் அதிகமான பணியாளர்களின் விவரங்களும் அடங்கும் என்றும்,
மேலும்,திருடப்பட்ட தகவல்களில் பயனாளர்களின் பெயர்கள்,தொலைபேசி எண்கள், மின்னஞ்சல்கள், முகவரிகள், கட்டண விவரங்கள் மற்றும் 1,000,000 கிரெடிட் கார்டுகள் அடங்கிய 18,00,00,000 ஆர்டர் விவரங்கள் உள்ளன” என்றும் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/UnderTheBreach/status/1383673094963822597?s=20
https://twitter.com/UnderTheBreach/status/1383679844920168451?s=20
இந்த ஹேக் குறித்து,இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்ஷேகர் ராஜாஹாரியா மார்ச் 5 ம் தேதி இந்தியாவின் தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனத்திடம் (சி.இ.ஆர்.டி-இன்) எச்சரித்ததாக ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் தெரிவித்தார்.
இதைப்போன்று சமீபத்தில்,இந்திய நிறுவனங்களான பிக் பாஸ்கெட், பை யுகோயின்,அப்ஸ்டாக்ஸ் மற்றும் ஜுஸ்பே போன்றவற்றிலும் ஹேக்கிங் நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல்,ஏப்ரல் மாத தொடக்கத்தில் 61 லட்சம் இந்தியர்கள் உட்பட கிட்டத்தட்ட 533 மில்லியன் (53.3 கோடி) பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆன்லைனில் கசிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.