கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி ட்வீட் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலாக பரவி வருகின்ற நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைகள் தற்போது அதிகரித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம், அதாவது கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், பண மோசடிகள் நடப்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதை தவிர்த்தாலே ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாகாமல் அதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நீங்கள் கியூ ஆர் கோட் குறியீட்டை ஸ்கேன் செய்வதால் உங்களுக்கு பணம் கிடைக்காது. உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி மட்டுமே கிடைக்கும்.
எனவே முடிந்தவரை மற்றவர்கள் உங்களுக்கு பகிர்ந்துகொள்ளும் கியூஆர் கோட்டை ஸ்கேன் செய்யாமல் இருங்கள். இது குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என எஸ்பிஐ வங்கி ட்வீட் செய்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…