ஆம்பன் புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகாலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியது. இந்த புயல், தற்பொழுது அதி உச்ச உயர் புயலாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் நிலவுகிறது.இதனையடுத்து, இன்று அதிகாலை நிலவரப்படி, ஒடிசாவின் பாராதீப்புக்கு தெற்கே, 980 கி.மீ தொலைவில், வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் திக்கா மற்றும் வாங்க தேசத்தின் ஹதியா பகுதியில் நாளை மறுநாள் மாலை கரையை கடக்கும் என்றும், மணிக்கு 180 முதல் 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலோர மாவட்டங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அம்பன் புயல் தாக்கம் கடினமாக இருக்கும் எனவும், இந்த புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகாலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…