இமயமலைப் பகுதியில் எந்த நேரத்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் சக்த்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வடஇந்திய மாநிலங்களான டெல்லி-என்சிஆர், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது.
திடீரென ஏற்பட்ட இந்த அதிர்வினால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்தது கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலையில் குவிந்தனர். குறிப்பிடத்தக்க வகையில், ரிச்சர் அளவுகோலில் 4-க்கு மேல் பதிவான 6 நிலநடுக்கங்கள், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவை மட்டும் உலுக்கியது என்றே கூறலாம்.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் ஒரு பயங்கரமான மற்றும் பெரிய நிலநடுக்கம் வரும் என மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் விஞ்ஞானி டாக்டர் அஜய் பால் “இமயமலைப் பகுதியில் எந்த நேரத்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் ஆழமாக இருந்தது. மற்றும் அதன் பிரதிபலிப்பு காரணமாக பல பகுதிகளில் அந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இமயமலைப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும். இமயமலைப் பகுதி நில அதிர்வு மண்டலம் எனவே எந்த குறிப்பிட்ட பகுதியையும் குறிப்பது கடினமானது. நிலநடுக்கத்தை கணிக்க முடியாது. டெக்டோனிக் தகடுகள் ஆற்றலை வெளியிடும் போது இது நிகழ்கிறது ” எனவும் கூறியுள்ளார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…