எச்சரிக்கை..! எந்த நேரத்திலும் சக்திவாய்ந்த ‘நிலநடுக்கம்’ இமயமலையை தாக்கலாம்.!

Default Image

இமயமலைப் பகுதியில் எந்த நேரத்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். 

நேற்று முன்தினம் இரவு வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில்  6.6 ரிக்டர் அளவில் சக்த்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வடஇந்திய மாநிலங்களான டெல்லி-என்சிஆர், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது.

திடீரென ஏற்பட்ட  இந்த அதிர்வினால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்தது  கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலையில் குவிந்தனர். குறிப்பிடத்தக்க வகையில், ரிச்சர் அளவுகோலில் 4-க்கு மேல் பதிவான 6 நிலநடுக்கங்கள், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவை மட்டும் உலுக்கியது என்றே கூறலாம்.

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் ஒரு பயங்கரமான மற்றும் பெரிய நிலநடுக்கம் வரும் என மக்கள்  அச்சத்தில் இருக்கும் நிலையில், வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் விஞ்ஞானி டாக்டர் அஜய் பால் “இமயமலைப் பகுதியில் எந்த நேரத்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ”  நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் ஆழமாக இருந்தது. மற்றும் அதன் பிரதிபலிப்பு காரணமாக பல பகுதிகளில் அந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இமயமலைப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும். இமயமலைப் பகுதி நில அதிர்வு மண்டலம் எனவே எந்த குறிப்பிட்ட பகுதியையும் குறிப்பது கடினமானது. நிலநடுக்கத்தை கணிக்க முடியாது. டெக்டோனிக் தகடுகள் ஆற்றலை வெளியிடும் போது இது நிகழ்கிறது ” எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்