எச்சரிக்கை..வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.!
தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வட மேற்கு திசை நோக்கி நகரும் என்பதால் கர்நாடகத்தில் சில பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒன்றாம் தேதியை தொடங்கிவிட்ட நிலையில் வங்கக்கடலில் சில பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது அடுத்தடுத்து 12 மணி நேரத்தில் மற்ற பகுதியில் தென்மேற்கு மழை தொடரும் மேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.