எச்சரிக்கை : போலி paytm செயலி மூலம் பணப்பரிமாற்றம் செய்து ஏமாற்றிய 3 பேர் கைது..!

Published by
லீனா

paytmspoof என்ற போலி paytm செயலி மூலம் மோசடி செய்த 3 பேர் கைது. 

நம்மில் பெரும்பாலானோர் பண பரிமாற்றத்திற்கு இன்று googlepay, phonepe மற்றும் paytm போன்ற செயலிகளை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த  செயலிகள்  மூலமாகவும் மோசடி செய்து ஏமாற்றும் கும்பல் இன்று பெருகி வருகிறது.

paytmspoof என்றால் என்ன? 

paytmspoof என்ற போலி செயலியின் செயல்பாடு என்னவென்றால்,  செலுத்தாத பணத்தை செலுத்தியது போன்று காட்டும். அதாவது பணத்தை செலுத்தியதற்கான பில்லை காட்டும். ஆனால், வாங்கி கணக்கில் பணம் மாற்றப்பட்டிருக்காது.

அந்த வகையில் paytmspoof என்ற போலி செயலி மூலம் மும்பையில் உணவக உரிமையாளரை ஏமாற்றிய 3 பேரை அந்தேரியில் உள்ள சகினாகா போலீசார்  கைது செய்து உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஆயுஷ் ஜக்டேல் (20), உணவகத்தில் இந்த முறையில் பணம் பரிமாற்றம் செய்ய முயன்ற போது போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன், போலி செயலி மூலம் மொத்தம் ரூ.49,400 செலுத்திய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடி செயலில் இருந்து தப்பிப்பது எப்படி?

ஒருவர் பணம் செலுத்திய பின் உங்களது கணக்கில் பணம் மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக இதுபோன்ற பரிவர்த்தனைகள் நடைபெறும்போது பேடிஎம் இல் இருந்து வணிகர்கள் குறுஞ்செய்தியை பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் பணம் செலுத்தியவுடன் பேடிஎம் ஒரு வித்தியாசமான ஒலி எழுப்பும். இவ்வாறு வராவிட்டால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

3 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

5 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

6 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

7 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

8 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

8 hours ago