கொரோனா நோயாளியை இருமுறை பாலியல் வன்கொடுமை செய்த வார்டு சிறுவன் கைது!
சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் கொரோனா நோயாளியை அங்குள்ள வார்டு சிறுவன் இருமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான்.
மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் எனும் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வரக்கூடிய 50 வயதுடைய பெண் நோயாளி ஒருவரை அந்த பராமரிப்பு மையத்தில் பணியாற்றக்கூடிய சிறுவன் ஒருவன் இருமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அப்பெண்மணி இருக்கக்கூடிய அறையில் யாருமில்லாத நேரத்தில் வந்து அச்சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் யாரும் இல்லாத நேரம் வந்ததாகவும், ஒரு முறை அந்த சிகிச்சை பெற்று வரக்கூடிய பெண்மணியின் குடும்பத்தினர் பார்த்து சத்தமிடமே அவன் தப்பி ஓடி விட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் கவனக்குறைவாக ஊழியர்கள் செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அச்சிறுவனை கைது செய்துள்ள போலீசார் மேலும் அந்த வார்டில் கவனக்குறைவாக பணியாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.