ராஜஸ்தானில் மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்த சுவர் – இருவர் பலி!

ராஜஸ்தானில் ஏற்பட்ட கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பூண்டி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்ததால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள கேஷோரைபட்டான் பகுதியில் இன்று காலை மழை வெள்ளத்தால் அதிக அளவில் நனைந்த சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேருக்கு மேல் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.