மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு!
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மீண்டும் நடை திறப்பு என அறிவிப்பு.
கேரளா – மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மீண்டும் நடை திறக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜைக்காக நாளை முதல் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
டிசம்பர் 31 முதல் 2022 ஜனவரி 22 வரை பக்தர்கள் தரிசிக்கலாம் என்றும் தினமும் 60,000 பக்தர்களுக்கு அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறுவதால் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து சபரிமலையில் டிசம்பர் 26-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.