சபரிமலையில்,வைகாசி மாத பூஜைக்காக மே 14 ஆம் தேதி நடை திறக்கப்படும் எனவும்,ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித ஸ்தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் வரை,ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 5000 பக்தர்களுக்கு தினசரி அனுமதி வழங்கப்பட்டு வந்தது.எனினும்,சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில்,கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து இன்று முதல் மே 16 ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்த முழு ஊரடங்கின்போது அனைத்து கடைகள் மற்றும் மத வழிப்பாடு தலங்களும் மூடப்பட்டு உள்ளது.
இருப்பினும்,வைகாசி மாதம் நடைபெறவுள்ள பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற மே 14 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும் என்று சபரிமலை தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து,சபரிமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுதீஷ்குமார் கூறுகையில்,”சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற மே 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளை 12 உறுப்பினர்களைக் கொண்ட வேத சுவாமிகள் வழிநடத்துவார்கள்.ஆனால்,பூஜை நடைபெறும் நாட்களில் கோவிலின் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்”,என்று கூறினார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…