டிச.8 வரை காத்திருங்கள்; காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி குறித்து கெஜ்ரிவால் பேச்சு!

Published by
பாலா கலியமூர்த்தி

குஜராத் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி குறித்த கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்.

நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றது. அதாவது, குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதியும், 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

89 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 63% வாக்குகள் மட்டுமே பதிவானது என்றும் ரண்டாம் கட்ட தேர்தலில் 67% வாக்குகள் பதிவாகியுள்ளன எனவும் தகவல் வெளியாகியிருந்தது. எனவே, குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் 8-ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனிடையே, குஜராத்தில் இதுவரை ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து குஜராத்தையும் கைப்பற்ற ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், தேர்தல் நிறைவடைந்த நிலையில், குஜராத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்க உள்ளார்கள் என அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

இந்த நிலையில், குஜராத் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி குறித்த கேள்வி டிசம்பர் 8 வரை காத்திருங்கள் என டெல்லி முதலமைச்சரும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதாவது டெல்லியில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்குமா என்பதை குறித்து அறிய மக்கள் டிசம்பர் 8-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்றுள்ளார்.

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என பல தேர்தல் கருத்துக் கணிப்புகள் வந்துள்ள  நிலையில், கெஜ்ரிவாலின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது. குஜராத்தில் பாஜக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடர்ந்து ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும். மறுபக்கம், பாஜக, காங்கிரஸ் இடையே ஒரு சில சீட்டுகள் வித்தியாசம் இருந்தால் ஆம் ஆத்மி வெற்றியை பொறுத்து காங்கிரஸுடன் கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago