ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்பு! காரணம் இதுதானா?

Default Image

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தால், பல தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற செயல்களில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஜூலை வரை 88 சதவீத வருவாய் பெருமளவில் சரிந்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்புக்கான பகுத்தறிவு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் அதன் தாய் நிறுவனமான ஏர் இந்தியா செயல்படுத்தியதைப் போன்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவளத் துறைத் தலைவர் டி. விஜயகிருஷ்ணன், ஆகஸ்ட் – 5ம் தேதி வெளியிட்ட அலுவலக சுற்றறிக்கையில், நிறுவனம், பிற விமான நிறுவனங்களுடன் சேர்ந்து, கோவிட் -19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஜூலை மாதம் வரை விமானத்தின் வருவாய் 88 சதவீதம் வரை குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்