வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு பிரச்சினை ! 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்தநிலையில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் பாஜகதான் முன்னிலை பெரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறார்.இதற்காக முக்கிய எதிர்கட்சித்தலைவர்களையும் சந்தித்து வந்தார்.
தற்போது டெல்லியில் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு பிரச்சினை பற்றி 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் .தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்றுள்ளார்.