இந்தியாவில் நடக்கும் போது தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி வரும் தேர்தல்களில் இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக முன்பு இருந்தது போல ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வேண்டும் என்றும், அது இருந்தால் மட்டுமே வாக்குப்பதிவில் நம்பகத்தன்மை அதிகரிக்கும் எனவும் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. இந்நிலையில் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைநகர் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பங்கேற்று பேசியதாவது, ஒரு காரை போல, பேனாவை போல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எளிதில், சேதப்படுத்திட முடியாது.இந்த இயந்திரங்களை ஹேக் செய்யவோ, அல்லது தகவல்களை மாற்றியமைக்கவோ முடியாது. கடந்த 20 ஆண்டுகளாக மின்னணு இயந்திரங்கள் தான் நடைபெற்ற தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில், மீண்டும் பழைய முறையில் ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கு இடமில்லை என்றும், உச்ச நீதிமன்றம் இயந்திரத்தை பயன்படுத்த சம்மதித்துள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…