13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்கள் நடைபெறும் தேர்தலில் இன்று (ஏப்ரல் 26) காலை 7 மணி முதல் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில், இன்று 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கடந்த 2019 தேர்தல் போல இந்த முறையும் போட்டியிடுகிறார். மேலும் காங்கிரஸ் எம்பி சாசிதரூர், திருவனந்தபுரத்திலும், திருச்சூரில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி , கேரள வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா மனைவி அன்னி ராஜா ஆகியோர் நட்சத்திர வேட்பாளராக களமிறங்கி உள்ளனர்.
மற்ற மாநிலங்களில் 2ஆம் கட்ட தேர்தல் விவரங்கள்…
அசாம் – 5 தொகுதிகள், மொத்தமுள்ள 14இல் முதற்கட்ட தேர்தலில் 5 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.
பீகார் – 5 தொகுதிகள், மொத்தமுள்ள 40இல் முதற்கட்ட தேர்தலில் 4 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.
சத்தீஸ்கர் – 3 தொகுதிகள், மொத்தமுள்ள 11இல் முதற்கட்ட தேர்தலில் 1 தொகுதிக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.
கர்நாடகா – 14 தொகுதிகள், மொத்த தொகுதிகள் 28 தொகுதிகள்.
மத்திய பிரதேசம் – 7 தொகுதிகள், மொத்தமுள்ள 29இல் முதற்கட்ட தேர்தலில் 6 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.
மகாராஷ்டிரா – 8 தொகுதிகள், மொத்தமுள்ள 48இல் முதற்கட்ட தேர்தலில் 5 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.
மணிப்பூர் – மொத்தமுள்ள 2 தொகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த பகுதியை தவிர பிற பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
ராஜஸ்தான் – 13 தொகுதிகள், மொத்தமுள்ள 25இல் முதற்கட்ட தேர்தலில் 12 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.
திரிபுரா – 1 தொகுதி, மொத்தமுள்ள 2இல் முதற்கட்ட தேர்தலில் 1 தொகுதிக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.
உத்திர பிரதேசம் – 8 தொகுதிகள், மொத்தமுள்ள 80இல் முதற்கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.
மேற்கு வங்கம் – 3 தொகுதிகள், மொத்தமுள்ள 42இல் முதற்கட்ட தேர்தலில் 3 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் – 1 தொகுதி, மொத்தமுள்ள 5இல் முதற்கட்ட தேர்தலில் 1 தொகுதிக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.