தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு.. வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள்!

Default Image

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், அசாமில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

தமிழகம்:

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் மக்கள் சிரமின்றி வாக்களிக்கவும், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார், துணை ராணுவத்தினர் உள்ளிட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.

கேரளா:

கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 2.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 14 தொகுதிகள் தனித்தொகுதிகலாகும். மேலும் 2 தொகுதிகள், பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மொத்தமாக 40,771 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த தேர்தலை விட 25, 041 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தேர்தல் பணிக்காக சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு பணிக்காக சுமார் 400 துணை ராணுவ படையினர், 2400 போலீஸ் அதிகாரிகள், 1600 சிறப்பு அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறவுள்ளது. மொத்தம் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரியில் 330 பதற்றமான வாக்குச்சாடிகள் உள்ளதாகவும், அதில் புதுச்சேரியில் 278, காரைக்காலில் 30, மாஹேயில் 8, ஏனாமில் 14 உள்ளது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. புதன்கிழமை காலை 7 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன அதுமட்டுமின்றி, மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்தும், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.

அசாம்:

அசாம் மாநிலத்தில் மொத்தமாக 126 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக கடந்த 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. அதனைதொடர்ந்து எஞ்சியுள்ள 40 தொகுதிகளுக்கு மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 337 வேட்பாளர்கள் போட்டியிடும்

இந்த தேர்தலில் மொத்தமாக 78,75,468 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 25 சதவீதம் பெண் வேட்பாளர்கள் ஆகும். வாக்குப்பதிவு நடைபெறும் சில தொகுதிகள் மிக பதட்டம் நிறைந்தவையாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்:

மேற்குவங்கத்தில் மொத்தமாக 294 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 31 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 205 வேட்பாளர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் 78 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், 10,871 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தில் பதற்றமான நிலை காணப்படுவதால், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்