பாஜக vs CPI(M) – காங்கிரஸ்.! முடிந்தது திரிபுரா சட்டமன்ற பொதுதேர்தல்… முடிவு மார்ச் 2ஆம் தேதி.!
திரிபுரா 60 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இன்று அங்குள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆளும் பாஜக பழங்குடியின மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கடந்த முறை 36 இடங்களை கைப்பற்றிய பாஜக இம்முறை அதிக இடங்களை கைப்பற்றும் என அம்மாநில முதல்வர் காலையில் வாக்குப்பதிவு செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களுடன் கூறினார்.
கூட்டணி : எதிர்க்கட்சியாக இருக்கும் இடதுசாரி கட்சி (CPM) காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. திரிபுரா -ஐபிஎஃப்டி மற்றும் திப்ரா மோதா ஆகிய கட்சிகளும் மாநில கட்சி அளவில் பிரதான முக்கியத்துவம் பெறுகின்றன. ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தால் மாநில கட்சிகளின் ஆதரவு பெரிதாக தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் : இந்நிலையில், மாலை 5 மணி உடன் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அந்ததந்த வாக்கு சாவடிகளில் உள்ள EVM வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் செய்யப்பட்டு உரிய அரசு அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை : நடைபெற்று முடிந்த வாக்குபதிவின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு தெரியும் தேதியானது மார்ச் 2 ஆகும். அன்று திரிபுராவில் யார் ஆட்சி கட்டிலில் அமரபோகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.