காங்கிரஸ் vs பாஜக : ராஜஸ்தானில் தொடங்கியது விறுவிறு வாக்குப்பதிவு.! 

Rajasthan Assembly election 2023

இந்திய தேர்தல் ஆணையம் இம்மாதம் நடைபெறும் என அறிவித்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், இன்று ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணி வரை மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ராஜஸ்தானில் 2018 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 73 தொகுதிகள் வென்று இருந்தது. இந்த முறை ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜகவும் கடுமையாக முயற்சித்து வருகிறது.

ராஜஸ்தானில் நாளை சட்டமன்ற தேர்தல்..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனார் காலமானதைத் தொடர்ந்து அவர் போட்டியிட இருந்த கரன்பூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து மற்ற 199 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் சுமார் 5 கோடியே 25 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 51,890 வாக்குச் சாவடிகளில் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 69 ஆயிரம் காவலர்கள் உட்பட மொத்தம் 1.70 லட்சம் பாதுகாப்புப்படை வீர்கள் பாதுகாப்பு பணியில் மாநிலம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்