ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

erode by election 2025

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

காலையில் 7 மணிக்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதனையடுத்து, 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. இன்னும் ஒரு சில வாக்கு சாவடிகளில் மட்டும் மக்கள் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். மேலும் டெல்லி தேர்தலை, மாலை 5 மணி நிலவரப்படி 57.78% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஈரோடு 

தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலையில் மந்தமாக தொடங்கிய நிலையில்,  மதியம் விறு விறுப்பாக நடைபெற்றது.

இந்த சூழலில், விறு விறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவானது மாலை 6 மணி ஆகியுள்ள நிலையில் தற்போது நிறைவுபெற்றுள்ளது. மேலும், மாலை 5 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்