தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!

Election

தெலுங்கானா மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லீஸ் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன.

கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119  தொகுதியில் 98 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சியை பிடித்து இருந்தது பாரதிய ராஷ்டிரிய கட்சி (பிஆர்எஸ்). கடந்த 2 முறையும் சந்திரசேகர ராவ் தெலுங்கானா முதல்வராக உள்ளார்.

சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

இந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிகின்றனர்.

மாநிலத்தில் மொத்தம் 35,655 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7571 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக காணப்படுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

375 கம்பெனி ராணுவ வீர்ரகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு . மற்ற பகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்