11 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!
நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியவை 11 மாநிலங்களில் 56 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் கொரோனா தொற்றுநோயையும் மீறி பாதுகாப்பான முறையில் நடைபெற்றது.
மீதமுள்ள ஏழு இடங்களில் இடைத்தேர்தல்களை நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த காலியிடங்கள் கேரளா, தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்காளங்களில் உள்ளன. இந்த 6 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 58 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.