இனி 18 முடியவேண்டாம்…17 முடிந்தால் போதும்..வாக்காளர் அட்டை குறித்து யோசனையில் ஆணையம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
17 வயது பூர்த்தியாகியவர்களை வாக்காளர்களாக சேர்க்கும் திட்டத்தை, பள்ளி அளவில் செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டைக்கு 18 வயது நிறைவடைந்தவர்கள், படிவம் 6 மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட செயற்குழுக்களில் விவாதங்கள் நடந்தன அதன் அடிப்படையில், புதிய திட்டங்களை செயல்படுத்த ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதன்படி, 17 வயது பூர்த்தியாகி 18 வயது ஆரம்பிக்கும் போதே வாக்காளர் பட்டியலில், எளிதாக பெயரை பதிவு செய்கின்ற வகையில், படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிகள் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்யும் வசதிகளை ஆணையம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆணையத்தின் இந்த நடவடிக்கையானது தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் விழிப்பணர்வை ஏற்படுத்தவும், புதிய வாக்காளர்களை அடையாளம் காண்பதற்காகவும் இம்முறையானது கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.