நாயின் புகைப்படத்துடன் வாக்களார் அடையாள அட்டை..!விவகாரம்
திருத்தம் செய்வதற்காக அனுப்பப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம் அச்சிடப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக திருத்த விண்ணபித்தவர் சுனில் கர்மாக்கர்.மேற்குவங்க மாநிலம் ராம்நகர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் இவர்.தனது வாக்காளர் அட்டையில் சில மாற்றங்கள் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் சம்பந்தப்பட்ட சுனிலுடைய புகைப்படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படமானது இருந்துள்ளதை கண்டு சுனில் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சுனில் கூறுகையில் வாக்களார் அடையாள அட்டையை என்னிடம் வழங்கும்போது, அதில் தவறுதலாக நாயின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருப்பதை பார்த்தேன் ஆனால் இதனை சரியாக பார்க்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரி அந்த புகைப்படத்தை பார்க்காமலேயே கையெழுத்து போட்டு தனக்கு வழங்கியதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் அவர் இச்சம்பவம் ஆனது ன்னுடைய கௌரவத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும் இது போன்ற தவறுகள் இனி நடக்காமல் இருக்க தொகுதி மேம்பாட்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் காட்டு தீப்போல் அந்த பகுதியில் பரவிய நிலையில் பதறி அடித்து கொண்டு வந்து இது குறித்து பேசிய தொகுதி மேம்பாட்டு அதிகாரி ராஜர்ஷி சக்ரபோர்த்தி வாக்காளர் அடையாள அட்டை கவனக்குறைவால் அச்சிடப்பட்டு இருக்கிறது, இது போன்று தவறு மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் பாதிக்கப்பட்ட சுனில் கர்மாக்கரின் வாக்காளர் அடையாள அட்டையில் அச்சிடப்பட்ட நாயின் புகைப்படத்தை அகற்றி சுனிலின் புகைப்படத்தையே அச்சிட்டு தருவதாக உறுதியளித்தார்.