தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை.., இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை..!
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை.
தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மே 2-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவும் சூழலில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இன்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனாவை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதா..? அல்லது ஒத்திவைப்பதாக குறித்து ஆலோசனை நடைபெற்றது.
குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று அல்லது நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.