தேர்தல் அதிகாரி தான் நந்திகிராம் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தலாமா வேண்டாமா என்று தீர்மானிக்க முடியும்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 இடங்களை கைப்பற்றி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்த கட்சி 47.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 77 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றியை அடுத்து, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. ஒரு மாபெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், முதலமைச்சர் வேட்பாளரான மம்தா பானர்ஜி, தான் பேட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார்.
நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ப முதலே, மம்தா பானர்ஜி மற்றும் அவரை அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரி இடையே கடும் போட்டி நிலவியது, மாறி மாறி முன்னிலை பெற்றுவந்த நிலையில், மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து திடீரென, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதனை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்ததை தொடர்ந்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய மம்தா, நந்திகிராம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அந்த தொகுதி தேர்தல் அதிகாரி யாருக்கோ கடிதம் எழுதியதாக தனக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஆளுநரே எனக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், திடீரென அனைத்தும் மாறிவிட்டது என்று கூறியுள்ளார். ஆகையால், கட்சியினர் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் தற்போது கொரோனாவுக்கு எதிராக போரிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் மேற்பார்வையாளர் தான் வாக்குகளை மறுபரிசீலனை செய்யலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் ஒப்புதல் அளித்தால் நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மறுபரிசீலனை செய்யலாம் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் (இ.சி.ஐ) தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…