சரத் பவர் முடிவை ஏற்க மறுத்து போராட்டத்தில் குதித்த தொண்டர்கள்…!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் சென்டருக்கு முன்பாக போராட்டம் நடத்தினர்.
மும்பையில் நடைபெற்ற தான் எழுதிய லோக் மாஜே சங்கதி என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சரத் பவாரின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அஜித்பவார் கூறுகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், பதவியில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய சரத் பவார் 2, 3 நாட்களாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
சரத் பவரின் இந்த முடிவை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் சென்டருக்கு முன்பாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், தொடர்ந்து கட்சியின் தலைவராக தொடர வேண்டும் எனவும், சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.