vodafone:-22ஆயிரத்து 100கோடி வரி விவகாரம்-சர்வதேச நீதியை ஏற்க முடியாது!
வோடபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரி விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
வோடபோன் நிறுவனம் தனது மூலதன லாபங்களுக்காக இந்திய அரசிற்க்கு 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டாம் என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவினை இந்திய அரசு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தீர்ப்பு குறித்து இந்தியா வெளியிட்டுள்ள தகவலில் இந்திய அரசின் வரி வசூலிக்கும் உரிமையை எத்தீர்ப்பும் கட்டுபப்படுத்தாது என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.மேலும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மீறி இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய அரசு இந்திய நாடாளுமன்றம் அல்லது நீதிமன்றங்களின் இறையாண்மைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.